அதிகார எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் அனைத்து குறுக்கு வீதிகளும் பிரதேச சபையால் நிர்வாகம் செய்யப்படுகின்றன. அதன் அடிப்படையில் அவ்வீதிகளை அபிவிருத்தி செய்தல், பராமரித்தல் போன்ற பணிகள் பிரதேச சபையால் மேற்கொள்ளப்படுகின்றன. வீதிகளில் இரு மருங்கில் உள்ள புற்களை வெட்டுதல், கால்வாய்களுக்கான பாலங்களை நிர்மாணித்தல், நடைபாதைகளை அமைத்தல் போன்றவை இதன்கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.