தூவிலி எல்ல

தூவிலி எல்ல

சுற்றுலா வலயத்தில் அமைந்துள்ள பிரதானமான சுற்றுலாத்தலம் தூவிலி எல்லயாகும். நெலுவ பிரதேச சபை மற்றும் தென் மாகாண சபை ஆகியனவால் அபிவிருத்தி செய்து பராமரிக்கப்படும் இச் சுற்றுலாத்தலம் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது ஒரு நீர்வீழ்ச்சி மாத்திரமன்று மூன்று நீர்வீழ்ச்சிகளாலான நீர்வீழ்ச்சித்தொகுதியாகும். ஏறத்தாழ 100 அடி உயரம் கொண்டதாக இருப்பதுடன் நீர்வீழ்ச்சியைச் சூழ புழுதி கிளம்புவது போலத் தெறிக்கும் நீர்த்துகள்கள் காரணமாக இது தூவிலி எல்ல (புழுதி நீர்வீழ்ச்சி) என்று பிரசித்தி பெற்றுள்ளது.

உலக உரிமையான சிங்கராஜ வனத்திலிருந்து ஆரம்பிக்கும் ஓடையொன்றிலிருந்து உருவாகியிருப்பதால் ஆண்டின் பெரும்பான்மையான காலப்பகுதியில் இந்நீர்வீழ்ச்சியின் வசீகரத்தைக் காணலாம்.

நீர்வீழ்ச்சியின் உச்சிக்கே செல்வதற்கு பாதுகாப்பான வேலியுடன் கூடிய படிகள் அமைக்கப்பட்டிருப்பதால் எவ் வயதினருக்கும் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் செல்ல முடியும்

இந் நீர்வீழ்ச்சிக்குரியதாக ஏறத்தாழ ஆறு ஏக்கர் வரையிலான பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசம் இருப்பதால் சிங்கராஜ வனத்துக்கேயுரிய தனித்துவமான அநேகமான தாவரங்களை மற்றும் விலங்குகளை இங்கே காணலாம்.

நீர்வீழ்ச்சிக்கு கீழ்ப்புறமாக சிறு குழந்தைகளும் வயது வந்த சுற்றுலா பயணிகளும் குளிக்கக்கூடியவாறு இரு நீர்த்தடாகங்கள் இயற்கையழகு கெடாதவண்ணம் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

February 2nd, 2023