சிங்கராஜ பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் இன்றும் கிராமிய அழகு மாறாமல் காணப்படுகிறது. இக்கிராமங்களில் தேயிலைத் தொழில், கித்துள் தொழில், நெற்செய்கை மற்றும் மளிகை பொருட்கள் உற்பத்தி பற்றிய அறிவை பெற்றுக்கொள்ள சுற்றுலா பயணிகளுக்கு வாய்ப்புண்டு. அக் கிராமத்தாரின் போலியற்ற புன்னகை அவர்களது விருந்தோம்பலின் விசாலத்தை பறைசாற்றும். அவ்வாறு பல்வேறு வகைப்பட்ட உள்நாட்டு பழங்கள் மரங்கள் தாவரங்கள்
மற்றும் விலங்குகளை இக்கிரமங்களில் காணலாம்.கிராமங்களில் உணவு வேண்டிய அளவு இருப்பதால் பல்வேறு வகை பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றை இங்கே காணலாம்.சில தாவரங்கள் மற்றும் விலங்குகள் நாட்டுக்கு மட்டுமே உரியனவாக இருப்பதுடன் சமயங்களில் சிங்கராஜ வனப் பிரதேசத்திற்கு மட்டுமே உரித்தான பறவைகளையும் இங்கே காணலாம்.