நெலுவ சுற்றுலா வலயம் நீர்வீழ்ச்சிகளுக்கு பிரசித்தமானதாகும். இவற்றுள் லங்காகம நீர் வீழ்ச்சிக் கோர்வை விசேஷ இடத்தை பெறும். இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் ஒன்றுக்கொன்று வேறுபட்ட 7 நீர்வீழ்ச்சிகளை காண முடியும். இதற்கு சுற்றுலா வழி காட்டி ஒருவரின் உதவியை பெற்றுக்கொள்வது கட்டாயமாகும். நெலுவ தூவிலி எல்ல அவ்வாறான அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய மற்றுமொரு இடமாகும். இங்கும் மூன்று நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளதோடு ஒரு கிலோ மீட்டர் அளவில் நீர்வீழ்ச்சிக்கு சமாந்தரமாக பயணிக்க வேண்டும். அப்போது நீர்வீழ்ச்சிக்கு மேலதிகமாக பறவைகள், மரங்கள் மற்றும் பல்வேறு விலங்குகளைப் பார்வையிடலாம்.
நீர்வீழ்ச்சிச் சுற்றுலா
February 2nd, 2023