இயற்கை சூழலின் அனுபவத்தை பெற்றுக்கொள்ள விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இச் சுற்றுலாத்தளத்தில் அந்த அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு நெலுவ லங்காகம சுற்றுலா வலயத்தில் சில ஒற்றையடிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் மேற்பார்வையில் கீழ் செயல்படும் இச் சுற்றுலா செயற்பாடுகளை அனுபவிக்க நுழைவுச் சீட்டு மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஒருவரை பெற்றுக்கொள்ளுதல் கட்டாயமாகும். செல்லும் தூரம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கட்டணங்கள் வேறுபடும்.
சிங்கராஜா வனப்பாதுகாப்பு பிரதேசம் பற்றிய மற்றும் அங்குள்ள ஜீவிகளின் பன்முகத்தன்மை பற்றிய அற்புதமான அனுபவங்களை மற்றும் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்